மாநகராட்சி பள்ளிகள்
Private Schools
 

                 மும்பை நகரில் வாக்கு உரிமை பெற்றவர்கள் 20 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அது மட்டுமின்றி வருட வருடம் ஓட்டுரிமை பெற்ற தமிழர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது என்று அரசியல் குறிப்புகள் சொல்கின்றன.                 அதே போன்று மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை வருடத்திற்கு பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் குறைந்து கொண்டே போகிறது. 1995 -ம் ஆண்டில் நடைபெற்ற கணக்கெடுப்பின் படி 25 ஆயிரம் மாணவர்கள் தமிழ்வழி கல்வி பயின்றுள்ளனர்.  சுமார் 550 க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இன்றைய நிலையில் 2011 - ல் 40 பள்ளிகளில் ஒரே ஒரு தலைமையாசிரியரின் கீழ் இரண்டு துணை தலைமையசிரியருடன் ஒன்பதயிரத்திக்கும் குறைவான மாணவர்கள் தான் தமிழ் வழிக்கல்வி பயில்கின்றனர்.   இதில் மட்டுங்கா, சீத்தாகேம்ப் , மலாடு ஆகியபகுதிகளில் உள்ள மூன்று பள்ளிகள் மட்டும் தான் உயர்நிலைக்கல்விவரை பயிற்றுவிக்கிறது. மீதமுள்ள 37 பள்ளிகளில் 31 பள்ளிகள் உயர் நிலை  ஆரம்ப பள்ளிகளும், 6 தாழ்நிலை ஆரம்பபள்ளிகளும் ஆகும். இதற்கிடையில் மாணவர்கள் இல்லாமல்  சில பள்ளிகள் மூடப்பட்டும்  உள்ளன  என்பது  குறிப்பிடதக்கது  .
           இது  போன்று  தனியார் பள்ளிகளில் சுமார் 5000 திற்கும் மேற்ப்பட்ட குழந்தைகள்  தமிழ்கல்வி  பயின்று  வருகின்றனர். அங்கேயும் மாணவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துகொண்டே போகிறது என்பது உண்மை.
        இந்த அளவிற்கு மும்பையில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய கரணம் என்ன?  மேற்படிப்புக்கு பள்ளி வசதி இல்லாத காரணமா?  அல்லது தமிழில் எத்தனை வரை படித்தாலும் மும்பையில் வேலைவாய்ப்பு வசதி இல்லாத காரணமா? அல்லது வேற்று மொழியின் மீது உள்ள மோகமா?
Copyright © 2011 mumbaitamilan.com - All Rights Reserved.    Contact Us - tpart@mumbaitamilan.com